Times of Puducherry

ரஜினியை நடிப்பால் எதிர்கொண்ட நடிகன்: காலா படத்தில் ஹரி தாதா கேரக்டரை தூக்கி நிறுத்திய நானா படேக்கர்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
8 Oct 2026 • 6:45 PM
Indian actor Nana Padekar Passed Away

இந்தி, மராத்தி சினிமாவில் தனிதன்மையாக நடிப்பை வழங்கிய நடிகரும் இயக்குனருமான நானா படேக்கர், இன்று (அக்டோபர் 8) தனது 75 வயதில் காலமானார்.

இந்தி மற்றும் மராத்தி சினிமாவில் பல வெற்றிகளை கொடுத்த அவர், ‘யக்‌ஷா’ (2010 கன்னடப் படம்) படத்தில் பெங்களூரு காவல் அதிகாரியாகவும் தந்தையாகவும், ‘பொம்மலாட்டம்’ (2008 தமிழ்ப் படம்) படத்தில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு திரைப்பட இயக்குநராகவும் நடித்திருந்தார். ஆனால், தனக்கு அறிமுகமில்லாத களத்தில் அவர் காட்டிய மிகவும் மிரட்டலான நடிப்புகளில் ஒன்று.

அவர் திரையில் உயிர் கொடுத்த மறக்க முடியாத வில்லன் கதாபாத்திரங்களுக்கு இணையாக நிற்கும் ஒன்று. பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான ‘காலா’ படத்தில் ரஜினிகாந்திற்கு எதிராக அவர் நடித்த ஹரி தாதா கேரக்டர் தான். இப்படத்தில் மும்பையைச் சேர்ந்த இந்த இரு சக்திவாய்ந்த மனிதர்களும் ஆடை அணியும் விதத்திலேயே இதைப் பார்க்கலாம்:

காலா (ரஜினிகாந்த்) உழைக்கும் வர்க்கத்தின் நிறமான கசங்கிய வேஷ்டி மற்றும் லைனென் உடைகளில் கருப்பு நிறத்தை அணிந்திருந்தால், ஹரி தாதாவோ பளிச்சிடும் வெள்ளை நிற உடையில் தோன்றுவார். ஹரி தாதா அதிகாரத்தின் மீதான தணியாத தாகத்தின் மூலம் நில அபகரிப்பின் உருவகமாக நின்றால், காலா நிலத்திற்கான போராட்டத்தை சுயமரியாதைக்கான போராட்டமாகப் பிரதிபலிக்கிறார். ஆனால், அமைதியான தந்திரம் மற்றும் நிதானத்தின் மூலம் ஹரி தாதா கதாபாத்திரத்திற்கு நானா படேக்கர் வலு சேர்த்திருப்பார்.

ஹரி தாதாவாக படேக்கரின் நடிப்பு, அவரது அளப்பரிய நிதானத்திற்காக என்றென்றும் நினைவுகூரப்படும். அதேவேளையில், ஒரு முன்னணி சூப்பர்ஸ்டார் படத்திற்கு ஒரு மிகச்சிறந்த வில்லனால் என்ன கொண்டுவர முடியும் என்பதற்கான சான்றாகவும் நானா படேக்கர் சிறந்த நடிப்பை வழங்கியிருப்பார். படேக்கர் மற்றும் ரஜினியின் அந்த ஒரே மோதலில், பிரமாண்டமான கைவினைத்திறனும் பிரமாண்டமான பாணியும் தெரியும் வகையில் அந்த காட்சி அமைந்திருக்கும்.

அதேபோல் 2008-ம் ஆண்டு வெளியான பாரதிராஜாவின் பொம்மலாட்டம் திரைப்படத்தில் எவருக்கும் அடங்காத ஒரு திறமையான திரைப்பட இயக்குனர் கேரக்டரில் நடித்திருப்பார். தனக்கு என்ன வேண்டுமோ அது கிடைக்கும்வரை முயற்சி செய்துகொண்டே இருக்கும் ராணா என்ற திரைப்பட இயக்குனர் கேரக்டரில் நானா படேக்கர் அந்த கேரக்டராகவே மாறி நடித்திருப்பார். சிறந்த நடிப்புக்காக 3 முறை தேசிய விருது வாங்கியுள்ள நானா படேக்கர், பல மாநில மற்றும் வெளிநாடு திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார்.

இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகபுர் ரஜினிகாந்த், என் அன்பு நண்பர் நானாஜி இனி நம்முடன் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில், இது நம்பமுடியாத அதிர்ச்சி. நான் உணர்ச்சியற்றுப் போனேன். உண்மையில் பேரழிவுக்கு உள்ளானேன். ஒரு தலைசிறந்த நடிகர். தனக்கென சொந்த சிந்தனையும் நம்பிக்கைகளும் கொண்ட ஒரு மனிதர். ஒரு எளிமையான மனிதர். ஒரு தலைசிறந்த நடிகர். அவருடன் பணியாற்றும் பாக்கியமும் பெருமையும் எனக்குக் கிடைத்தது. நானா பாவ், நீங்கள் இல்லாதது ஒரு பெரிய இழப்பு என பதிவிட்டுள்ளார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top