Times of Puducherry

இந்திய 'ஏ' அணி 1-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
3 Oct 2026 • 6:35 PM
cricket-India-won-against-Australia

இந்தியா – ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு இடையேயான 2-வது 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புதுச்சேரி கேப் சீகெம் மைதானத்தில் நடந்து வந்தது.

இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா ஏ அணி 358 ரன் குவித்த நிலையில், இந்திய ஏ அணி 167 ரன்னில் சுருண்டது. 191 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா ஏ அணி 49 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 365 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய ஏ அணி, 3-ம் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து 4-வது மற்றும் கடைசிநாள் போட்டி நேற்று நடந்தது. சீரான இடை வெளியில் விக்கெட் விழுந்ததால் இந்திய ஏ அணிதடுமாறியது. இருப்பினும் கடைசியாக களம் இறங்கிய நாசிகேத் பூதே (20) மற்றும் பிரபுல் ஹிஞ்சே (0) ஆகியோர் கடைசி 3 ஓவர்கள் போராடி சமாளித்தனர். முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து இந்திய ஏ அணி 310 ரன்கள் எடுத்திருந்தபோது போட்டி டிராவாக அறிவிக்கப்பட்டது.

இந்திய 'ஏ' அணி 1-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது

ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த சாம் ஹார்ப்பர் ஆட்டநாயகனாகவும், இந்தியா அணியை சேர்ந்த ஷம்ஸ் முலானி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

https://x.com/TimesPuducherry/status/2106349030670479570

2 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்ததால், இந்திய ‘ஏ’ அணி 1-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் போட்டி வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top