Times of Puducherry

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
3 Oct 2026 • 5:24 PM
revenue-election-trichy

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சங்க கட்டிடத்தில் இன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் சண்முகவேலன் வரவேற்று பேசினார். தேர்தல் ஆணையராக மணப்பாறை தனி வட்டாட்சியர் சத்திய நாராயணன், உதவி தேர்தல் ஆணையராக திருச்சி கலெக்டர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் செயல்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.

மாவட்டச் செயலாளர் பொன் மாடசாமி தொடக்க உரையாற்றினார். மாநில துணைத்தலைவர்கள் சோமசுந்தரம், தமிழரசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். முன்னாள் மாநில தலைவர் சுடலையாண்டி, முன்னாள் மாவட்ட தலைவர் அருள்ஜோஸ், முன்னாள் மாவட்ட தலைவர் துணை ஆட்சியர் பிரகாஷ், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் பால்பாண்டி மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட பொருளாளர் உலகமணி நன்றி கூறினார்.

இதில் புதிய மாவட்ட தலைவராக பிரேம்குமார், மாவட்டச் செயலாளராக பொன் மாடசாமி, மாவட்ட பொருளாளராக உலகமணி, மாவட்ட துணை தலைவர்களாக சண்முகவேலன், மகேஷ், பிரகாஷ், ராமலட்சுமி, சாந்தகுமார், மாவட்ட இணைச்செயலாளர்கள் கண்ணன், மணிகண்டன், சரவணன், கார்த்திகேயன், மணிகண்டன் ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top