Times of Puducherry
புதுச்சேரியில் வட மாநில வாலிபர் மது போதையில் 4 கோடி ரூபாய் பணமும், 4 ஸ்காட்ச் மதுபானமும் கேட்டு 100 அடி உயர மரத்தின் உச்சியின் மீது ஏறி போராட்டம். 3 மணி நேரத்திற்கு மேலாக மரத்திலே சாக்குப் போக்கு கட்டிய வாலிபரை வட மாநில இளைஞரின் உதவியோடு தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி மீட்டனர்.
புதுச்சேரி கடற்கரை செல்லும் சுப்பையா சாலை தலைமை தீயணைப்பு நிலையம், அருகே உள்ள 100 அடி உயரம் கொண்ட மரத்தின் உச்சியின் மீது வட மாநில வாலிபர் ஒருவர் மது போதையில் ஏறி கொண்டு கீழே இறங்க மறுத்து சாக்குபோக்கு காட்டினார். இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்களும் வாலிபரை பார்ப்பதற்காக தீயணைப்பு நிலையம் அருகே ஒன்று கூடி வாலிபர் செய்த சேட்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
தகவல் அறிந்த ஒதியன் சாலை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஒன்றிணைந்து 100 அடி உயரத்துக்கு ஏணியை தயார் செய்து மரத்தின் உச்சியின் மீது ஏறி வாலிபரை மீட்க முயன்றனர். ஆனால் அந்த வாலிபர் 4 கோடி ரூபாய் பணமும் நான்கு ஸ்காட்ச் மதுபானமும் கொடுத்தால் தான் மரத்தை விட்டு இறங்குவதாக அடம் பிடித்து மரத்திலேயே அமர்ந்து கொண்டார்.
100 அடி உயரம், 3 மணி நேர போராட்டம்; மதுபானம் கேட்டு மரத்தின் மீது ஏறி போராடிய வட மாநில வாலிபர்#TimesOfPuducherry | #Puducherry pic.twitter.com/U3tHbnApgc— Times of Puducherry (@TimesPuducherry) October 3, 2026
100 அடி உயரம், 3 மணி நேர போராட்டம்; மதுபானம் கேட்டு மரத்தின் மீது ஏறி போராடிய வட மாநில வாலிபர்#TimesOfPuducherry | #Puducherry pic.twitter.com/U3tHbnApgc
சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக நிலவிய சம்பவத்தால் போலீஸாரும் தீயணைப்புத் துறையினரும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய் நின்றனர். இது குறித்து கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த வட மாநில வாலிபர் அணிஸ் என்பவர் சற்று யோசிக்காமல் தீயணைப்பு வீரரின் உதவியோடு 100 அடி உயரத்துக்கு மேற்பட்ட மரத்தின் மீது ஏறி வாலிபரை மீட்க படாத பாடுபட்டார்.
சாமர்த்தியமாக மரத்தில் இருந்த வாலிபரின் கால்களை கைரால் கட்டி தீயணைப்பு துறை வீரரின் உதவியோடு பாதுகாப்பாக மீட்கப்பட்டார். இதனை வேடிக்கை பார்த்தவர்கள் கைதட்டி ஆரவாரமாக அவருக்கு வரவேற்பும் அளித்தனர். அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார். மேலும் 3 மணி நேரமாக போலீசாரும் தீயணைப்பு துறையினரும் போராடிய நிலையில் சற்று யோசிக்காமல் அணிஸ் சென்ற இளைஞர் மரத்தின் மீது பயமில்லாமல் ஏறி கயிறு கட்டி மீட்டது அனைவரின் பாராட்டையும் பெற்றது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.