Times of Puducherry
கடலூர் எஸ்பி தலைமையில் வாரத்தில் இரண்டு நாட்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது. கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாரம் தோறும் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் பொதுமக்களின் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் பெட்டிஷன் மேளா நடைபெற்று வருகிறது.
அதன்படி இன்று (03.10.2026) சனிக்கிழமை கடலூர் மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அவர்களது குறைகளை கேட்டறிந்து நேரடியாக விசாரணை மேற்கொண்டார். பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு, விரைந்து உரிய தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் கோடீஸ்வரன், ரகுபதி, துணைக் காவல் கண்காணிப்பாளர் தினேஷ்குமார் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.