Times of Puducherry

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா:தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சலீம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
3 Oct 2026 • 3:43 PM
saleem-aligates-cash distribution-by co-contestants

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் குடும்ப அட்டைக்கு என்.ஆர்.காங்கிரஸ் 2000 ரூபாயும் திமுக,காங்கிரஸ் தலா 1000 ரூபாயும் வழங்கி வாக்கு சேகரிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரமும் நாளை மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம் தேர்தல் ஆணையத்தில் புகார் ஒன்று அளித்தார்.அந்த புகார் மனுவில் புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது, எனவே இதனை தடுத்து தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சலீம்:

புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்படுவதற்காக கொண்டு வரப்பட்ட 2500 தங்க காசுகள் மற்றும் ரொக்கம் என சுமார் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பொருட்கள் பணம் எந்த கட்சி உடையது என்பதனை தேர்தல் துறை விளக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் தேர்தலில் போட்டியிடும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் குடும்ப அட்டைக்கு 2000 ரூபாயும், காங்கிரஸ், திமுக வேட்பாளர்கள் தலா ஆயிரம் ரூபாயும் விநியோகம் செய்து வாக்குகளை பெறுவதாக குற்றம் சாட்டிய சலீம் இதனை தடுப்பதற்கு தேர்தல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, முறைகேடுகளை தடுப்பதற்காக தட்டாஞ்சாவடி தொகுதி முழுவதும் ட்ரோன்கள் பறக்க விடப்படும் என்று அறிவிக்கப்பட்டது ஆனால் ட்ரோகள் மூலம் கண்காணிக்கப்படவில்லை. எனவே தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகள் பணத்தை வாரி இறைக்கிறார்கள். எனவே தேர்தலை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்த தேர்தல் துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் பணம் பட்டுவாடாவை தடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top