Times of Puducherry

ஏனாம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - அமைச்சர் அறிவுறுத்தல்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
27 Oct 2026 • 8:05 PM
Yanam-residents-need-to-be-alert-mallad-advice

ஏனாம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்- இருக்க வேண்டும் என புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கேட்டுக் கொண்டுள்ளார் இது குறித்த அவர் வெளியிட்டுள்ளார் அறிக்கையில்:

அர்னாப் புயலின் தாக்கம் இன்று இரவு ஏனாம் பகுதியில் தீவிரமாக இருக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அறிவுறுத்தியுள்ளார்.

சேதமடைந்த வீடுகள் மற்றும் ஓலைக் குடிசைகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு அரசு விதிமுறைகளின்படி இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏனாமில் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:

8885613111,9391149707,9032093583 பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கவும். அவசர நிலை ஏற்பட்டால் உடனடியாக மேற்கண்ட எண்களைத் தொடர்புகொண்டு உதவி பெறவும் என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அறிவுறுத்தி உள்ளார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top