Times of Puducherry

அர்னாப் புயலை முன்னிட்டு பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - மல்லாடி கிருஷ்ணாராவ்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
27 Oct 2026 • 4:17 PM
public-remain-cautions-of-arnab-cyclone-malladi

அர்னாப் புயலை முன்னிட்டு பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், அத்தியாவசியத் தேவைகள் இருந்தால் மட்டுமே வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் என் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மக்களிடம் அறிவுறுத்தியுள்ளார்.

புயலால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளான புறநகரில் உள்ள சாவித்திரி நகர், கிரியம்பேட்டை உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்ற அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், அப்பகுதி மக்களுக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை ஆலோசனைகளை வழங்கினார்.

அர்னாப் புயலை முன்னிட்டு பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - மல்லாடி கிருஷ்ணாராவ்

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும், அரசு ஏற்பாடு செய்துள்ள நிவாரண முகாம்களில் தங்கிப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், கனமழை மற்றும் பலத்த காற்று வீசும்போது மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் விளம்பரப் பலகைகளுக்கு அருகில் செல்லக் கூடாது என்றும், அறுந்து விழுந்த மின்கம்பிகளைத் தொடக்கூடாது என்றும் எச்சரித்தார்.

அவசர காலங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், அரசு அதிகாரிகள் வழங்கும் முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களைப் பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கேட்டுக்கொண்டார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top