Times of Puducherry
புதுவை ஜீவானந்தபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திர குமார்(வயது 45). இவர் ரியல் எஸ்டேட் புரோக்கராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று வழக்கம் போல் தனது வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் அவர் இரவில் தனது நண்பர்கள் 4 பேருடன் இருசக்கர வாகனத்தில் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அடுத்த திருச்சிற்றம்பலம் அருகே உள்ள முந்திரி தோப்பு பகுதிக்கு சென்றுள்ளார். பின் னர் ராஜேந்திரகுமார் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் என அனைவரும் முந்திரி தோப்புக்கு அருகே உள்ள மறைவான பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
அப்போது அங்கு 5 பேர் கொண்ட கும்பல் வந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மது அருந்தி கொண்டிருந்தவர்களை நோக்கி வந்துள்ளது. மது அருந்திக்கொண்டிருந்தவர்கள் சுதாரித்து தப்பிப்பதற்குள் ராஜேந்திரகுமாரை கண்ணி மைக்கும் நேரத்தில் 5 பேர் கும்பல் அரிவாளால் சர மாரியாக வெட்டியது. இதில் கை, கால், தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்த ராஜேந்திரகுமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவர் உயிரிழந்ததை உறுதி செய்ததும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து வேகமாக தாங்கள் வந்த வாகனத்தில் தப்பியோடி விட்டனர். இதை பார்த்து அதிர்ச்சியான சக நண்பர்கள் உடனடியாக ஆரோவில் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந் ததும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமாரும் சம்பவ இடத் திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதன்பின்னர் உயிரிழந்த ராஜேந்திரகுமாரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் ராஜேந்திரகுமாரும், இன்னும் சிலரும் சேர்ந்து கிரும் பாக்கத்தில் ஒரு நிலத்தை விற்றதாகவும், அதில் வந்த பணத்தை பங்கு பிரிப்பதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த முன்விரோதத்திலேயே 5 பேர் கும்பல் ராஜேந்திரகுமாரை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ரியல் எஸ்டேட் புரோக்கரை கொலை செய்த 5 பேரை அடையாளம் கண்டு அவர்களை பிடிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.