Times of Puducherry

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
27 Oct 2026 • 4:32 PM
compensation-for-formers-affected-by-rain-petition-to-agri.-director

தொடர் மழையால் பாகூர், திருக்கனூர், வில்லியனூர் உள்ளிட்ட பகுதிகளில் நீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாய சங்க நிர்வாகிகள் அன்புமணி, சந்திரன், ராஜாங்கம் உள்ளிட்டோர் விவசாயத்துறை இயக்குனரை சந்தித்து மனு அளித்தனர்.

மேலும், பாசன வாய்க்கால்களைத் தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், நெல் உள்ளிட்ட விவசாயப் பொருட்களை அரசு நேரடியாகக் கொள்முதல் செய்து உரிய விலை வழங்க வேண்டும், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

விவசாயப் பொருட்களை விற்பனை செய்ததற்கான தொகை வழங்கப்படாமல், ரூ.2 கோடிக்கு மேல் நிலுவையில் இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் பணத்தைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மேலும், விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வு காண, குறைதீர் கூட்டங்களை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top