Times of Puducherry

உழவர்சந்தைக்கு அடிப்படை வசதி செய்து தர கோரி வேளாண்துறை அதிகாரிகளுக்கு வேண்டுகோள்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
27 Oct 2026 • 6:15 PM
requesting-agri.-dept-officials-to-provide-basic-amenities-for-uzhavar-sanhai

திண்டிவனம் உழவர்சந்தைக்கு கூடுதல் கடைகள் ஏற்படுத்தி தரவும், அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு வேளாண்துறை அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். திண்டிவனத்தில் கடந்த 2000ம் ஆண்டு முதல்வராக கருணாநிதி இருந்த போது உழவர் சந்தை திறக்கப்பட்டது.

இங்கு, மேல்பேரடிக்குப்பம், ஊரல், பட்டணம், காட்டுசிவிரி, கீழ்மாவிலங்கை, பாம்பூண்டி உள்ளிட்ட 50க்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். ஒரு நாளைக்கு 16 மெட்ரிக் டன் காய்கறிகள்,பழங்கள் விற்பனை செய்யப்டுகிறது. ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 605 நுகர்வோர்கள் பயனடைந்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 4 கோடியே 67 லட்சம் மதிப்பில் 990 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் உழவர் சந்தைக்கு அதிகளவில் விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வரும் நிலையில், 64 கடைகள் மட்டுமே இருப்பது போதுமானதாக இல்லை.

அருகில் காலியாக இடம் உள்ளதால், அந்த இடத்தில் கூடுதலாக கடைகள் கட்டித்தர வேண்டும். மழை பெய்தால் தரைப்பகுதியில் மழை நீர் தேங்கி சேரும் சகதியுமாகி விடுகிறது. இதனால், பேவர்பிளாக் கற்கள் பதிக்க வேண்டும். உழவர்சந்தை அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள இடத்தில் வாகன பார்க்கிங் ஏற்பாடு செய்து, தனியாக ஒரு நுழைவு வாயில் அமைக்க வேண்டும்.

மேலும், குடிநீர், கழிவறை வசதிகள் செய்து தரவேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். திண்டிவனம் உழவர் சந்தையை முன்மாதிரி உழவர்சந்தையாக மாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம், வேளாண்துறை அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top