Times of Puducherry
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட நகரப் பகுதியில் உள்ள தியாகு முதலியார் வீதி, ரங்கபிள்ளை வீதி, வெள்ளாள முதலியார் வீதி, நீடராஜபையர் வீதி, தம்புநாயக்கர் வீதி, லூயிபிரகாசம் வீதி மற்றும் சுற்றி உள்ள வீதிகளில் மழைக்காலங்களில் மழை நீர்சின்னசுப்பராய பிள்ளை வீதி, பாரதி வீதி, காந்தி வீதி, போன்ற பகுதியில் உள்ள -U- வடிவ வாய்க்கால் வழியாக வெளியேறி சின்ன வாய்க்கால் வழியாக கடலில் கலக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பெரிய மார்க்கெட் , குபேர் அங்காடியில் இருந்து வெளியேறும் மழைநீரும் மேற்கண்ட பகுதிகள் வழியாக கடலில் கலக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. குபேர் அங்காடி மீன் மார்க்கெட் பகுதியில் இருந்து வெளியேறும் மீன் கழிவுகள் மற்றும் கழிவுநீர் மேற்கண்ட பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால்களில் கலந்து துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த நேரு உள்ளாட்சி துறை இயக்குனர் ஆதாஷ் புதுச்சேரி நகராட்சி ஆணையர் அருண்அய்யாவு அவர்களுடன் இணைந்து, பெரிய மார்க்கெட் குபேர் அங்காடி மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள வாய்க்கால்களை பார்வையிட்டனர்.
மீன் கழிவுகளையும், மீன் கழுவு கழிவு நீரை சுத்திகரிப்பதற்காக 2011 – 2016 காலகட்டங்களில் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த நேரு(எ)குப்புசாமி முயற்சியின் காரணமாக அப்போதைய முதல்வர் ரங்கசாமி ஆட்சி காலத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் 2016 ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் போது திட்டம் முழுமையாக கைவிடப்பட்டுள்ளது. மீண்டும் இத்திட்டத்தினை கொண்டு வந்து பெரிய மார்க்கெட் மீன் கழிவுகள் மற்றும் கழிவுநீர்களை சுத்திகரிப்பு செய்து மழைநீர் வடிகால் வாய்க்கால் மூலமாக வெளியேறும் வகையில் செயல்படுத்த நேரு உள்ளாட்சி துறை இயக்குனர் அவர்களிடமும், புதுச்சேரி நகராட்சி ஆணையர் அவர்களிடமும் மேற்கண்ட பணிகள் மேற்கொள்ள வலியுறுத்தினார்.
உள்ளாட்சித் துறை இயக்குனர் இதற்கான சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு , முதல்வர் அவர்களிடம் பணிகள் பற்றி பேசி இதற்கான பணிகள் செய்ய உறுதி அளித்தனர். ஆய்வின்போது புதுச்சேரி நகராட்சி செயற்பொறியாளர், உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர், மற்றும் நகராட்சி அதிகாரிகளும் நேயம் மக்கள் கழக பிரமுகர்களும், நிர்வாகிகளும் பலர் உடன் இருந்தனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.