Times of Puducherry

உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
7 Oct 2026 • 8:11 PM
world-chest-cancer-awareness-campaign-villupuram

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த மாதம் முழுவதும் மார்பகப் புற்றுநோய் குறித்த இலவச மருத்துவ பரிசோதனைகள் நடைபெறுகிறது. விழுப்புரத்தில் நடைபெற்ற உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் எம். லூசி நிர்மல் மெடோனா செய்தியாளர்களிடம் பேசியதாவது:

உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு-2026 மார்பகப் புற்றுநோய் என்பது பெண்களுக்கு மட்டும் வரும் நோய் அல்ல அது ஆண்களுக்கும் வரும் இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுகிறது.

குறிப்பாக நகரப் பகுதியில் மட்டுமில்லாமல் கிராமப் பகுதியில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு எடுத்து விளக்கும் வகையில் தன்னார்வலர்கள் கொண்டு பிரச்சாரம் விழிப்புணர் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த மாதம் முழுவதும் மார்பகப் புற்றுநோய் குறித்த இலவச மருத்துவ பரிசோதனைகள் நடைபெறுகிறது. இவற்றினை பொதுமக்கள் பயன்படுத்தி சுகாதாரத்தோடும் ஆரோக்கியத்தோடும் இருந்திட அறிவுறுத்தப்படுகிறது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top