Times of Puducherry
திருச்சி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது ;
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஸ்வர்குமாரை நீக்குவதற்கு அவர் மீது ராகுல் காந்தி என்ன குறைகண்டார் ? எதற்காக புகார் தெரிவிக்கிறார் என்று தெரியவில்லை. அவர் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும் என எண்ணுகிறாரா? எதை நினைத்து ராகுல் காந்தி இப்படி பேசுகிறார் என்று புரியவில்லை. காங்கிரஸ் கட்சி ஆளும் கேரள மாநிலத்தில் SiR குளறுபடி எதுவும் இல்லை. அப்படியிருக்கும் போது, பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் SiR குளறுபடி இருப்பதாக ராகுல் காந்தி எப்படி குற்றம் சாட்டுகிறார்? பீகார் தேர்தல் முடிந்தவுடன் ராகுல் காந்தி வெளிநாடு சென்று வந்தார். அங்கிருந்து வந்தவுடனேயே இப்படி குற்றம் சாட்டி பேசி வருகிறார். ஒருவேளை SiR குளறுபடி இருந்திருந்தால் நாங்கள்தான் (BJP) ஜெயித்திருக்க வேண்டும். ஆனால், கேரள அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா, SiR வந்ததால் தான் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் தாய் இத்தாலி நாட்டுக்காரர் என்பதால், தனது வாக்குரிமை போய்விடுமோ என்று ராகுல் அச்சம் கொள்கிறாரா?.இடைத்தேர்தலுக்கு பிறகு தமிழகத்தின் எதிர்காலம் குறித்து நம்மால் ஜோசியம் கூற முடியாது. ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் மீது தமிழக மக்களுக்கு அதிருப்தி நிலவி வருகிறது.
நடைபெற்ற இடைத்தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட சத்தியபாமா 31 கோடி ரூபாய் செலவு செய்ததாக கூறியது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சமூக வலைதள செய்திகள் குறித்து நான் எதுவும் கூற முடியாது. கடந்த தேர்தலை விட இந்த இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்கான அவசியம் தற்போது வந்துள்ளது. காரணம், அவருடைய மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்த இடைத்தேர்தலில் தமிழக மக்கள் அளிக்கும் நல்ல தீர்ப்பைப் பொறுத்து தமிழகத்தின் எதிர்காலம் நன்றாக இருக்கும்.
அசோக் லேலண்ட் நிறுவனம் ஒரு உள்ளூர் நிறுவனம். ஆனால், அதன் நிர்வாகிகளை லண்டனில் சந்தித்துப் பேசி இருக்கிறார் முதல்வர். தமிழ்நாடு ஒரு உற்பத்தி மாநிலமாக இருந்தாலும், தற்போது வரி வருவாய் குறைந்து வருகிறது. தமிழகத்தில் நிலவும் மின்வெட்டிற்கு என்ன தீர்வு காணப் போகிறார்கள்? இது தொடர்பாக ஆய்வுக் கூட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. கூட்டங்கள் நடந்திருந்தால் நடவடிக்கை எடுப்பது நல்லது. கடந்த கால அரசு என்ன செய்ததோ, அதையேதான் தற்போதைய அரசும் செய்து கொண்டிருப்பதாக நைனா நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.