Times of Puducherry
புதுடில்லி மீனவள அமைச்சகத்தில் அதன் செயலர் அபிலக்ஸ் லிக்ஹி இணை செயலர் சுரபி ராய் சந்தித்த புதுச்சேரி மீனவளத்துறை அமைச்சர் மல்லாடி கிருக்ஷ்ணா ராவ் புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் மீன்வளத்தினை பெருக்கிடவும் . மீனவர் நலத்தினை காத்திடவும் பல்வேறு கோரிக்கையினை முன் வைத்துள்ளார். மத்திய மீன்வள அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் சந்தித்து மீனவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்த மனு கொடுத்துள்ளார் அந்த மனதில் கூறியதாவது:
புதுச்சேரி முகத்துவாரத்தை தூர்வாரி ஆழப்படுத்துதல்; ஏனாம் மீன்பிடி துறைமுகத்தின் 2ஆம் கட்ட கட்டுமானம்; ஏனாம் பிராந்தியத்தில் பழுதடைந்த ஐஸ் பிளண்ட் (Ice Plant)-யினை இடித்து விட்டு புதிய 10 டன் கொள்ளளவு கொண்ட புதிய Ice Plant நிறுவுதல். மேற்கூறியவைக்கு அனுமதி மற்றும் நிதியுதவியினை அமைச்சர் கோருகிறார்.
மேலும், அமைச்சர் அவர்கள் மத்திய அமைச்சர் அவர்களை பிரதம மந்திரி மீன்வளத்திட்டத்தின் தொடர்பான கோரிக்கைகள் குறித்தும் விவாதிக்க இருக்கிறார். குளிரூட்டப்பட்ட கனரக வாகனங்கள் மற்றும் மோட்டர் வாகனங்கள் பயனாளிகளுக்கு அளிக்க ரூ.3 கோடியினை 2026-27 நிதியாண்டில் ஒதுக்கீடு செய்தல். கூடுதலாக 30 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்கிட அனுமதி அளித்தல்; அனைத்து பராம்பரிய மற்றும் மோட்டர் படகுகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அளித்திடும் வகையில் 940 பயனாளிகளுக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை 4186 பயனாளிகளுக்கு உயர்த்தி வழங்க ஒப்புதல் அளித்தல்; புதுச்சேரி கடற்கரையில் 13 செயற்கை பவளப்பாறைகள் நிறுவிட அனுமதி அளித்தல்;ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வாங்கிட மானியம் பெற பயன்படுத்தப்படாத பொது பிரிவு ஒதுக்கீடுகளை பெண்கள் பிரிவாக மாற்ற அனுமதி அளித்தல்; புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் நிலையான மீன்வளக் கட்டமைப்பு வசதிகளுக்காக போதுமான நிதியினை அளித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.