Times of Puducherry
இந்தியா ஏ, ஆஸ்திரேலியா ஏ கிரிக்கெட் அணிகள் இடையிலான தொடர் புதுச்சேரி துத்திப்பட்டில் உள்ள கேப்சி கேம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி பகல் இரவாக நடந்தது. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா அணி முதலி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன் நாதன் மேக்ஸ் வீ நீ அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 123 ரன்(35 பத்து) எடுத்தார். கேட்டன் வில் சதர்லாந்து 77 ரன் எடுத்தார். ஆஸ்திரேலியா அணி 48.2 ஓவர்களில் 274 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
பின்னர் களம் இறங்கிய இந்திய அணி 31.4 ஓவர்களில் 149 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா ஏ அணியில் அதிகபட்சமாக ரஜத்படிதார் கீரன்னும், நிஷாந்த சிந்து 31 ரன் எடுடுத்தனர். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் மஹ்லி பியர்ட்மேன் 23 ரன்கள் விட்டுக் கொடுத்து, நாலு விக்கெட்டும். ஸ்பென்சர் ஜான்சன் 36 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டும் வீழ்த்தி வெற்றிக்கு வழி வகுத்தனர்
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் வருகிற ஒன்பதாம் தேதி நடக்கிறது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.