Times of Puducherry
புதுச்சேரி காவல்துறையில் ஏ எஸ் ஐ பிரபு , உடல்நலம் சரி இல்லாமல் இறந்து போனார். அவரது குடும்பத்திற்கு காவல்துறை சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது. இதுகுறித்து ஐ ஆர் பி என் தலைமை காவலர் விஜயகுமார் தெரிவித்ததாவது :
புதுச்சேரி காவல்துறையில் ஐ ஆர் பி என் காவல் பிரிவில் பணிபுரிந்த பிரபு ஏ.எஸ்.ஐ (வயர்லெஸ்) உடல்நிலை குறைவால் 01.09.2026 தேதி அன்று காலமானார். ஐ ஆர் பி என் காவல்துறையில் பணிபுரியும் நண்பர்களிடத்தில் இருந்து பெறப்பட்ட உதவி தொகை 4,25,000/- ஐ அவரது மகள் P.ஜெயஸ்ரீ வங்கிக் கணக்கில் ₹400,000/-(நான்கு லட்ச ரூபாய்) நிரந்தர வைப்பு தொகையாக செலுத்தப்பட்டது. மீதமுள்ள தொகை சுமாராக ₹25,000/- ஐ ஆர் பி என் காவல்துறையினர் முன்னிலையில் பிரபு ஏ எஸ் ஐ குடும்பத்தாரிடம் கொடுத்தனர். மறைந்த பிரபு திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.