Times of Puducherry

யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம்: மத்திய அரசைக் கண்டித்து திருச்சியில் வணிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
7 Oct 2026 • 6:43 PM
upi-transaction-protest-trichy

யுபிஐ (UPI) பணப் பரிவர்த்தனைகளுக்கு 0.4 விழுக்காடு கட்டணம் விதிக்கும் முடிவை மத்திய அரசு ரத்து செய்யக்கோரியும், சில்லறை வணிகத்தைப் பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்திற்குத் தடை விதிக்கக்கோரியும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் திருச்சி ஆட்சியரகம் முன்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவர் எஸ்.பி.பாபு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்துகொண்டு, மத்திய அரசின் வணிகர் விரோதப் போக்கிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாபு பேசுகையில்;

சிறு வணிகர்கள், சில்லறை வணிகத்தில் ஈடுபட்டு வரும் பெட்டிக்கடைக்காரர்கள், காய்கறி மற்றும் பூ வியாபாரிகள், உணவக உரிமையாளர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான சிறு வணிகர்கள் மிகக் குறைந்த லாப வரம்பிலேயே தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், யுபிஐ பரிவர்த்தனைக்குக் கட்டணம் விதித்தால் அது வணிகர்களுக்கும், நுகர்வோர்களுக்கும் கடுமையான பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும்; கூடுதல் நிதிச் சுமையையும் உருவாக்கும். எனவே, வணிகர்கள் மீது எந்த வகையிலும் இக்கட்டணங்களைச் சுமத்தக் கூடாது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு ‘பூஜ்ஜிய கட்டணம்’ (Zero Charges) என்ற நடைமுறையையே தொடர வேண்டும். யுபிஐ பரிவர்த்தனைக்கான பராமரிப்புச் செலவினத் தொகையை, மத்திய அரசே மானியமாக முழுமையாக வழங்க வேண்டும்.
வங்கிகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்களின் லாபத்திற்காக அடிமட்ட வர்த்தக அமைப்பைப் பலிகடா ஆக்குவதற்கு மத்திய அரசு துணைப்போகக் கூடாது.

ஜி.எஸ்.டி. மற்றும் பணவீக்கத்தால் சில்லறை வணிகம் ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் யுபிஐ பரிமாற்றத்திற்குச் சர்சார்ஜ் (கட்டணம்) விதித்தால், அது டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை முடக்கி, மீண்டும் பணப்புழக்கத்தை அதிகப்படுத்திவிடும். இது சில்லறை வர்த்தக வளர்ச்சியைப் பின்னோக்கி இழுக்கும். எனவே, நவீன வர்த்தகத்திற்குத் தடையாக இருக்கும் இத்தகைய கெடுபிடிகளை மத்திய நிதி அமைச்சர் உடனடியாகக் கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்தக் கட்டண விதிப்பு அறிவிப்புகளை மத்திய அரசு திரும்பப்பெறாத பட்சத்தில், அகில இந்திய வணிகர் அமைப்புகளுடன் கைகோர்த்து, தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு மற்றும் தொடர் மறியல் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாகத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் படித்தவை

  • October 7, 2026 • 7:31 PM

5 வயது பெண் குழந்தைக்கே பாதுகாப்பு இல்லையா? – வேல்முருகன் கேள்வி

  • October 7, 2026 • 7:19 PM

மத்திய மீன்வள அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங்கை சந்தித்து மல்லாடி கிருஷ்ணா ராவ் மனு

  • October 7, 2026 • 6:59 PM

உடல் நலக்குறைவால் உயிரிழந்த ஏ எஸ் ஐ பிரபு குடும்பத்திற்கு காவல்துறை சார்பில் நிதி உதவி

  • October 7, 2026 • 6:43 PM

யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம்: மத்திய அரசைக் கண்டித்து திருச்சியில் வணிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

  • October 7, 2026 • 6:25 PM

கரூர், கோவை அரசு மருத்துவமனைகளில் மாத்திரை கவரில் இந்தி – டிஆர்பி ராஜா திமுகவின் அப்பட்டமான பித்தலாட்டம்.. மொழி பிழைப்பு சாடிய அமைச்சர் அருண்ராஜ்!

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top