Times of Puducherry

தமிழ்நாடு அரசு இருமொழிக் கொள்கையில் சமரசம் செய்கிறதா - வேல்முருகன் கேள்வி

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
2 Oct 2026 • 10:56 PM
velmurugan-dual language-acceptance-ruling party

மாநில நெடுஞ்சாலைப் பலகைகளில் இந்தி இடம்பெறுவது ஏன்? தமிழ்நாடு அரசு இருமொழிக் கொள்கையில் சமரசம் செய்கிறதா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்–நாசரேத் SH-93 சாலையில், தமிழ்–ஆங்கிலத்துடன் இந்தி இடம்பெற்றுள்ளதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு, விதிமுறை மற்றும் ஒப்புதல் குறித்து தமிழ்நாடு அரசு உடனடியாக விளக்கமளிக்க வேண்டும். இது நிர்வாகப் பிழையா அல்லது புதிய மொழி நடைமுறையை திட்டமிட்டு புகுத்தும் முயற்சியா என்பதை தெளிவுபடுத்தி, தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள இந்தி எழுத்துகளை நீக்கி, தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை நிலைநாட்ட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு அரசு இருமொழிக் கொள்கையில் சமரசம் செய்கிறதா - வேல்முருகன் கேள்வி
NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top