Times of Puducherry

தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? எப்படி புகாரளிப்பது?

எழுதியவர்: Ramprasath S
1 நிமிட வாசிப்பு
2 Oct 2026 • 6:15 PM
private omni bus overcharging complaint process and how to report it

தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் எப்படி புகாரளிப்பது என்பது குறித்து இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர் விடுமுறை அல்லது பண்டிகை காலங்களில் தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்த்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது. அரசு எவ்வளவு சீரிய நடவடிக்கைகள் எடுத்தாலும் தனியார் பேருந்துகளின் அராஜக போக்கை தடுக்க முடிவதே இல்லை. இந்த நிலையில் காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி ஆகிய தொடர் வார விடுமுறையை முன்னிட்டு 02-10-2026 முதல் 21-10-2026 வரை பொதுமக்கள் வெளியூர்களுக்கு அதிக அளவில் பயணம் செல்கின்றனர்.

இதை சாதகமாக பயன்படுத்தி சில தனியார் ஆம்னி பேருந்துகள் வழக்கத்திற்கு மாறாக கட்டண உயர்வை அறிவித்துள்ளன. இதை தடுக்கும் வகையில் மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாடு முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச் சாவடி ஆய்வாளர்களைக் கொண்டு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. 

அதிகப்படியான கட்டணம் வசூல் செய்யும் ஆம்னி பேருந்துகள், மோட்டார் வாகன விதிகளுக்கு புறம்பாக இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள், தமிழக சாலை வரி செலுத்தப்படாமல் இயக்கப்படும் பிற மாநில வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து அபராதம் விதிக்கவும், வாகனங்களை சிறை பிடித்து மற்றும் வரி வசூல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டாலோ அல்லது பிற புகார்களுக்கு பயணிகள் கீழ்காணும் தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது குறுஞ்செய்தி மூலமாகவோ புகார் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகின்றனர். 

  1. தொலைபேசி எண்: 9384808333 அல்லது 1800 425 6151 
  2. புகார் தெரிவிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: tc.tn@nic.in
NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top