Times of Puducherry
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு, வருகிற செவ்வாய்க்கிழமை (6-ம் தேதி) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 5 முனை போட்டி உருவாகியுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால் வேட்பாளர்களின் சூறாவளி பிரசாரத்தால், இரு தொகுதிகளும் களைகட்டியுள்ளது.
இந்நிலையில், இன்று தாராபுரம் தி.மு.க வேட்பாளர் சுகன்யாவுக்கு ஆதரவாக தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். பிறகு தாராபுரம் உடுமலை சாலையில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில், த.வெ.க தலைவர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்தும் பேசினார் ஸ்டாலின். இடைத்தேர்தலில் த.வெ.க-விற்கு “தாராபுரம் மக்கள் கொடுக்கும் அடி, மரண அடியாக இருக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய ஸ்டாலின், “சத்தியத்திற்கு விரோதமாக செயல்பட்ட அந்த வேட்பாளரை, பெட்டிபாமா, பல்டிபாமா என மக்கள் அழைக்கின்றனர். அந்த உருவத்தை வைச்சுக்கிட்டு எப்படி தான் பல்டி அடிச்சாங்கன்னு தெரியல” என்று உருவக் கேலி செய்யும் வகையில் ஸ்டாலின் பேசினார். இந்தநிலையில், ஸ்டாலினின் இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
“ஒரு பட்டியலின வேட்பாளர் என்பதற்காக அவங்கள பொதுவெளியில இவளோ அருவருப்பா உருவ கேலி செய்து பேசுனதுக்கு கேடு கெட்ட ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேணும்னு த.வெ.க சார்பா ஆர்ப்பாட்டம் அறிவிக்க வேண்டும்” என்று எக்ஸ் தள பக்கத்தில் பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
“ஒரு கட்சித் தலைவர் உடல் தோற்றத்தை இழிவுபடுத்தும் செயலில் ஈடுபடுவது மிகவும் மோசமானது. கட்சித் தலைவரை விட தொண்டர்கள் சிறந்தவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது! ஒவ்வொரு நாளும் 52 வாரங்களின் மிகக் குறைந்த நிலையை எட்டுகிறது.” என்று மற்றொரு பயனர் தெரிவித்துள்ளார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.