Times of Puducherry
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் எஸ் எஃப் ஐ வெற்றி பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் சண்முகம் வாழ்த்தினார்.
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தலில் எஸ் எஸ் ஐ சேர்ந்த மாணவர்கள் வெற்றியைப் பதிவு செய்துள்ளனர். மாணவர்களின் உரிமைக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் தொடர்ந்து போராடும் எஸ் எஃப் ஐ அமைப்பின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. வெற்றியைப் பெற்ற எஸ் எஃப் ஐ மாணவர்கள் கட்சி அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து, தலைவர்களிடம் வாழ்த்துகளைப் பெற்றனர்.
வெற்றி பெற்ற தோழர்களை, மாணவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் P. சண்முகம் புதுச்சேரி மாநில செயலாளர் எஸ். ராமச்சந்திரன் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.