Times of Puducherry
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நேயம் மக்கள் கழக தலைவருமான நேரு(எ)குப்புசாமி இன்று பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனையில் உப்பனாறு வாய்க்கால் மேல் சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து கொடுக்குமாறும், இப்பணிகளால் உருளையன்பேட்டை தொகுதியில் உள்ள பொதுமக்கள் எந்த அளவு சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் என்று எடுத்துக் கூறினார்.
மேலும் உருளையன்பேட்டை வார்டு முல்லை நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் மழை நீர் மறைமலை அடிகள் சாலை நீதிமன்றம் முன் பகுதியில் உள்ள வாய்க்கால் வழியாக உப்பனாறு வாய்க்காலில் கலக்கின்றது. மறைமலை அடிகள் சாலை நீதிமன்றம் முன் பகுதியில் உள்ள வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு முல்லை நகர், முல்லை நகர் விரிவு, செங்கேணி அம்மன் நகர், JVS நகர்,பெரியார் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் இருந்து வெளியேறும் மழை நீர் மேற்கண்ட வாய்க்கால் அடைப்பு காரணமாக மழைநீர் வெளியேறாமல் மக்கள் வசிக்கும் பகுதியில் சூழ்ந்து கொள்கிறது.
இதனால் மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளார்கள் மேற்கண்ட வாய்க்காலை தூர்வாருதல் மற்றும் பொதுப்பணித்துறை மூலம் புதிதாக அமைக்கப்பட வேண்டிய சிமெண்ட் சாலைகள் அமைத்தல், புதிய கான்கிரீட் வாய்க்கால்கள் அமைத்தல், மற்றும் பொதுப்பணித் துறை மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.