Times of Puducherry
சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அப்புறப்டுத்தி நடவடிக்கை எடுத்த தற்காலிக சபாநாயகர் அன்பழகன்போக்குவரத்து சீரானது.
உப்பளம் தொகுதியில் மழை மற்றும் பலத்த காற்றால் முறிந்து விழுந்த மரக்கிளையை உடனடியாக அப்புறப்படுத்த சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அப்புறப்டுத்தி நடவடிக்கை எடுத்த தற்காலிக சபாநாயகர் அன்பழகன்.
புதுச்சேரியில் இரவு பெய்த கனமழை மற்றும் அதிகாலை வீசிய பலத்த காற்றின் காரணமாக உப்பளம் தொகுதி ஜெயராம் செட்டியார் தோட்டம் இரண்டாம் தெருவில் சாலையில் இருந்த மரம் அதிகாலை முறிந்து விழுந்தது. இதில் ஓரிரண்டு வீடுகள் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து மக்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தற்காலிக சபாநாயகருமான அன்பழகன் அவர்கள் அப்பகுதியில் இருந்த மின் இணைப்பை துண்டித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து முறிந்து விழுந்த மரக்கிளையை மரம் அறுக்கும் மின் இயந்திரம் மூலம் ஒரு மணி நேரமாக போராடி மரத்தை அப்புறப்படுத்தினர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.
இதில் விரைந்து செயல்பட்ட தீயணைப்பு துறையினரை தற்காலிக சபாநாயகர் அன்பழகன் அவர்கள் பாராட்டினார். பின்னர் வெட்டபட்ட மர கிளைகளை உள்ளாட்சி துறை மற்றும் கிரீன் வாரியர்ஸ் நிறுவனத்தினர் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் உத்தரவிட்டார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.