Times of Puducherry
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே மேல மங்கலத்தில் கடந்த 18.10.2026 அன்று மதியம் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த மதன் @ சுள்ளான் மதன் (26), கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர்.
ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் சிவகங்கை சேர்ந்த சந்தோஷ் (19), ஜெய மாணிக்கராஜ் (20), முத்து சூர்யா (20),மதுரையை சேர்ந்த விக்னேஷ் (23), ஆகியோர்கைது செய்யப்பட்ட 4 நபர்கள் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற எதிரிகளைக் கைது செய்வதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாகத் தேடப்பட்டு வருகின்றனர்.
மேலும், இக்கொலை வழக்கு தொடர்பாக இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் சமூக நல்லிணக்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கருத்துகள் மற்றும் புகைப்படங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சட்டம் ஒழுங்கைப் பாதிக்கும் வகையில், சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் பதிவுகள் வெளியிடுவோர் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்வதுடன், கடுமையான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் சிவகங்கை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.