Times of Puducherry
வைரஸ் தொற்றுகள் மழைக்கு பிறகு இயற்கையாகவே ஏற்படும் டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், எலிக் காய்ச்சல், வயிற்றுக்போக்கு உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறை தீவிர காண்காணிப்பு நடவடிக்கை எடுக்க தாங்கள் உத்தரவிட வேண்டும். முதலமைச்சரிடம் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் கோரிக்கை
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும் தற்காலிக சட்டப்பேரவை தலைவருமான அன்பழகன் இன்று முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
புதிய காற்றழுத்த மண்டலம் உருவாகியுள்ளதால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு வார காலத்திற்கு பெருமழையும் காற்றும் வீசக்கூடும். மழை பெய்யும் போது நிவாரண பணிகளும், மழை முடிந்த பிறகு மக்களுக்கு ஏற்படும் தொற்று நோய்களிலிருந்து மக்களை காப்பாற்ற சம்பந்தப்பட்ட துறைகள் ரீதியான ஒருங்கிணைப்பு அவசியம் தேவை.
பெருமழையை எதிர்கொள்ள அரசு ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை, வருவாய் துறை, சுகாதாரத்துறை, மின்துறை வனத்துறை உள்ளிட்ட முக்கியம் வாய்ந்த துறையின் அதிகாரிகள் ஒருங்கிணைப்பு இல்லாததால் நிவாரண பணிகளில் தேக்கம் ஏற்படுகிறது.
வைரஸ் தொற்றுகள் மழைக்கு பிறகு இயற்கையாகவே ஏற்படும் டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், எலிக் காய்ச்சல், வயிற்றுக்போக்கு உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறை தீவிர காண்காணிப்பு நடவடிக்கை எடுக்க தாங்கள் உத்தரவிட வேண்டும். நோய் தொற்றை தடுக்க சுகாதாரமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.
பெருமழையை எதிர்கொள்ளும் முதலமைச்சர் அவர்கள், சம்பந்தப்பட்ட நிலையில் அனைத்து மாண்புமிகு துறைகளின் உயரதிகாரிகள் கூட்டத்தை கூட்டி உரிய உத்தரவுகளை பிறப்பித்து மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுகிறேன்.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் உள்துறை செயலர், வருவாய்துறை, உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை, மின்துறை ஆகிய துறையின் துறை ரீதியான செயலாளர்களை கொண்ட சிறப்புக்குழுவை அமைக்க தாங்கள் வழிவகை செய்ய வேண்டும். அமைச்சர்களை நிவாரண பணிகளை தலைமை ஏற்று நடத்திடவும், தண்ணீர் அதிகம் தேங்கும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மன உறுதியும் ஆதரவும் வழங்க, அமைச்சர்கள் நேரில் முகாமிட்டு பணி செய்ய, மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஆணை பிறப்பிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று மனுவில் கூறியுள்ளார்
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.