Times of Puducherry

தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 75 லட்சம் தெரு விளக்கிற்கு ஒதுக்கீடு - வைத்திலிங்கம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
21 Oct 2026 • 1:43 PM
75-lakhs-allocated-for-street-lamp-vaithilingam

புதுச்சேரி காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 75 லட்சம் தெரு விளக்கிற்கு ஒதுக்கீடு செய்து உள்ளார்.

இது குறித்த அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:

தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 75 லட்சம் தெரு விளக்கிற்கு ஒதுக்கீடு - வைத்திலிங்கம்

புதுச்சேரி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வெ. வைத்திலிங்கம் பல்வேறு தொகுதிகளில் தெரு மின்விளக்குகள் பற்றாக்குறை இருப்பதை அறிந்து அதற்காக தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 75 லட்சம் ஒதுக்கீடு செய்து மின் துறையின் மூலம் 30 வாட் LED தெரு மின் விளக்குகள் 3474 எண்ணிக்கையிலும், 120 வாட் LED தெரு மின்விளக்குகள் 1800 எண்ணிக்கையிலும் கொள்முதல் செய்வதற்கு ஆணை பிறப்பித்து தற்சமயம் அந்த மின்விளக்குகள் மின் துறையில் பெறப்பட்டுள்ளன.

தேவையின் அடிப்படையில் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு பல்வேறு தொகுதிகளுக்கு பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வெ. வைத்திலிங்கம் ஒதுக்கீடு செய்து கடிதம் அளித்துள்ளார்கள். இந்த மின் விளக்குகள் அந்தந்த பகுதிகளில் மிக விரைவில் பொருத்தப்படும்.

அதிகம் படித்தவை

  • October 21, 2026 • 1:59 PM

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் புதிய வழி முறையில் புற்றுநோய் ஆராய்ச்சி செய்தல் பற்றிய கருத்தரங்கு

  • October 21, 2026 • 1:43 PM

தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 75 லட்சம் தெரு விளக்கிற்கு ஒதுக்கீடு – வைத்திலிங்கம்

  • October 21, 2026 • 1:16 PM

வைரஸ் தொற்று பரவலை தடுக்க சுகாதாரத்துறை துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அன்பழகன் முதல்வருக்கு கோரிக்கை

  • October 21, 2026 • 12:52 PM

பலத்த காற்றால் முறிந்து விழுந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்

  • October 21, 2026 • 12:34 PM

அமைச்சர் ஆனந்த் தியாகராஜ நகர் தொகுதிகளில் மழை நீரை அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொண்டார்

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top