Times of Puducherry

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவ.12 ந்தேதி முதல் டிச.11 ந்தேதி வரை சிறப்பு முகாம் - ஆட்சியர் பிரத்திக் தயாள்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
21 Oct 2026 • 10:03 AM
inclusion-deletion-of-names-in-electoral-roll-special-camp-trichy-colloctor

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 01.01.2027-ஐ தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 2027ம் ஆண்டின் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் நடைபெற உள்ளது.

மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் வாக்காளர் பதிவு அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. பின்னர் இப்பட்டியல் வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். வரைவு வாக்கு சாவடிகள் பட்டியல் மீது கோரிக்கைகள் இருந்தால் எழுத்து பூர்வமாக பெறப்பட்டு தகுதியின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்து இறுதி வாக்குச்சாவடி பட்டியல் இறுதி செய்யப்படும்.

மேலும், 2027-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் தொடர்பாக ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் நவ.12 அன்று வெளியிடப்பட உள்ளது.

பின்னர், இப்பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், உள்ளாட்சி அலுவலகங்கள் மற்றும் சம்மந்தப்பட்ட வாக்குசாவடிகளில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். இதன் மூலம் பொது மக்கள் தங்கள் பெயர் மற்றும் பிற விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.

நவ.12-ம் தேதி முதுல் டிச.11-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் அதாவது 01.01.2027 அன்று 18 வயதினை பூர்த்தி செய்பவர்கள் மற்றும் அடுத்த மூன்று காலண்டுகள் அதாவது 01.04.2027, 01.07.2027 மற்றும் 01.10.2027 அன்றைய நாளில் 18 வயதினை பூர்த்தி செய்பவர்கள் தங்களின் பெயர்களை சேர்தல், திருத்துதல், முகவரி மாற்றம், இறந்த வாக்காளர்களின் பெயரை நீக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

மேற்படி காலக்கட்டத்தில் சம்மந்தப்பட்ட வாக்குசாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களுக்கு உரிய படிவங்களில் விண்ணப்பிக்கலாம். பெயர் சேர்த்தல், திருத்தங்கள் மேற்கொள்ள www.nvsp.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளார்.

அதிகம் படித்தவை

  • October 21, 2026 • 10:15 AM

சிவகங்கை அருகே ரவுடி சுள்ளான் மதன் கொலை வழக்கில் மதுரையை சேர்ந்த இளைஞர் உட்பட 4 பேர் கைது

  • October 21, 2026 • 10:03 AM

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவ.12 ந்தேதி முதல் டிச.11 ந்தேதி வரை சிறப்பு முகாம் – ஆட்சியர் பிரத்திக் தயாள்

  • October 21, 2026 • 9:52 AM

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பி.டெக். மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடக்கம்

  • October 21, 2026 • 12:20 AM

எஸ் ஐ ஆர் கண்டித்து புதுச்சேரி மக்கள் மேடை அமைப்பு சார்பில் 23ஆம் தேதி கவர்னர் அலுவலகம் நோக்கி பேரணி

  • October 21, 2026 • 12:12 AM

சிறார்கள் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதி கொடுத்தால் பெற்றோர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும்

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top