Times of Puducherry
புதுச்சேரியில் வருகின்ற பத்தாம் தேதி பாரதிதாசன் அரசு கலைக் கல்லூரியில் தொழிலாளர் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது இது குறித்து வேலைவாய்ப்பு துறை இயக்குனர் சுரேந்தர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
தொழிலாளர்துறை, வேலைவாய்ப்பகம் வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று பாரதிதாசன் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, புதுச்சேரியில் காலை 9.30 மணி முதல் 2.30 மணி வரை புதுச்சேரி, தமிழகம் மற்றும் பிற மாநிலத்தை சார்ந்த 40 முன்னனி தனியார் நிறுவனங்களில் (Integra, Supreme Industries, Datamatics, TVS Lucas, Manatec, Leo Fasteners etc.) உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமில் 2000க்கும் மேற்பட்ட காலி பணி இடங்களை நிரப்புவதற்காக 10th, 12th, ITI, Diploma, Graduation (Engineering, Arts, Pharmacy, Nursing, Commerce, Science, Education etc), MBA and any other Post Graduation முடித்தவர்கள் இம்முகாமில் பங்குபெறலாம்.
இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது 10 தற்குறிப்பு (Resume) மற்றும் கல்வி தகுதிக்கான உண்மை நகல் சான்றிதழ்களுடன் வரும் 2026 அக்டோபர் மாதம் 10ஆம் தேதி அன்று பாரதிதாசன் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, புதுச்சேரியில் காலை 9.30 மணி முதல் மாலை 2.30 மணிவரை நடைபெற உள்ள முகாமில் கலந்துகொண்டு பயன்பெறும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.