Times of Puducherry
பிரதமர் நரேந்திர மோடி பொது வாழ்வில் 25 ஆண்டுகள் நிறைவு செய்வதை முன்னிட்டு, பாஜக சார்பில் நாடு முழுவதும் இன்று சேவா ஜோதி கலச யாத்திரை நடந்தது. புதுவை கடற்கரை சாலை காந்தி திடல் அருகே சேவா ஜோதி யாத்திரை நிகழ்ச்சி நடந்தது. பாஜகவின் சேவா சங்கல்ப் அபியான் இயக்கத்தின் முக்கிய நிகழ்வாக இந்த யாத்திரை நடத்தப்பட்டது.
2001 அக்டோபர் 7ந் தேதி குஜராத் முதல்வராக பதவியேற்ற மோடி, பொது சேவையில் 25 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை குறிக்கும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. காலை 9.30 மணிக்கு கவர்னர் கைலாஷ்நாதன், முதல்அமைச்சர் ரங்கசாமி, புதுவை மாநில பாஜக தலைவர் ராமலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சிவக்கொழுந்து, செல்வகணபதி எம்பி, புதுவை மாநில பாஜக பொறுப்பாளர் சுரேந்திரன், முன்னாள் சபாநாயகர் செல்வம், எம்எல்ஏக்கள் ஜான்குமார், டாக்டர் விக்னேஸ்வரன், முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர், அசோக்பாபு, செல்வம் மற்றும் பாஜகவினர் பலர் கலந்து கொண்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பிரதமர் மோடி, காணொலி வாயிலாக உரையாற்றி விக்சித் பாரத் 2047 உறுதிமொழி வாசிக்க, அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். புதுவை உட்பட நாடு முழுவதும் உள்ள 750 மாவட்டங்களில் இந்த நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சேவா ஜோதி ஏற்றப்பட்டு, கடற்கரை சாலையில் இருந்து பைக் பேரணி மற்றும் பாதயாத்திரை புறப்பட்டது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.