Times of Puducherry
திருச்சியில் கோட்டை ரயில் நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் மேம்பாலம், இ.பி.ரோட்டில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலம் பணி, ஜங்சன் ரயில் நிலையம் அருகே நடைபெற்று வரும் மேம்பால பணி, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி ஆற்றுப்பாலம் பணி, மாம்பழச்சாலை – சிந்தாமணி புதிய பாலம் ஆகிய பாலப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் திருச்சி மாநகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது.
போக்குவரத்து நெரிசலை குறைத்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் பாலப் பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தியும், ஆமை வேகத்தில் நடந்து வரும் கட்டுமான பணிகளை கேலி செய்யும் விதத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆமை(பொம்மை) விடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகே பாலம் கட்டுமான பணி நடைபெற்று வரும் இடத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். எனவே, மத்திய மாநில அரசுகள் இதில் தீவிரமாக கவனம் விரைந்து முடிக்க வேண்டும் இல்லை என்றால் அடுத்த கட்டமாக மிகப்பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சேதுபதி தெரிவித்தார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.