Times of Puducherry
மத்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் ‘மை பாரத்’ இயக்கம் சார்பில் பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளின் “போதையில்லா இளைய சமுதாயம்- வளர்ச்சி அடைந்த பாரதம்” போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.
கடற்கரை சாலை, காந்தி சிலை அருகில் தொடங்கி கம்பன் கலையரங்கம் வரை நடைபெற்ற விழிப்புணர்வு நடை பயணத்தை துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரசு செயலர் முத்தம்மா, இளைஞர் & விளையாட்டு துறையின் இயக்குனர் சுதாகர், மை பாரத் இயக்கத்தின் புதுச்சேரி பொறுப்பாளர் த்ரவீன், நாட்டு நலப்பணித்திட்ட புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் சதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர். போதை ஒழிப்புக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி மாணவர்கள் நடை பயணம் மேற்கொண்டனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.