Times of Puducherry

மல்லாடி கிருஷ்ணராவ் நிதின் கட்காரியை சந்தித்து புதுச்சேரி போக்குவரத்து சம்பந்தமாக பேச உள்ளார்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
5 Oct 2026 • 7:31 PM
mulladi-yet to-meet-nitin ketkare

மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரியுடன் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் நாளை சந்தித்து புதுச்சேரி போக்குவரத்து சம்பந்தமாக பேச உள்ளார். இது குறித்த மல்லாடி கிருஷ்ணன் ராவ் அலுவலக செய்தி குறிப்பில்:

குஜராத் மாநிலத்தில் ஏக்தா நகரில் நடைபெற்று வரும் 2 நாள் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் குறித்த கருந்தரங்கில் கலந்து கொண்ட புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், அக்கருத்தரங்கினை தலைமையேற்ற மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் . நிதின் கட்கரி அவர்களிடம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி எழுதிய கடித்தினை அளித்தார்.

மல்லாடி கிருஷ்ணராவ் நிதின் கட்காரியை சந்தித்து புதுச்சேரி போக்குவரத்து சம்பந்தமாக பேச உள்ளார்

அக்கடிதத்தில், முதல்வர் மத்திய சாலை உட்கட்டமைப்பு நிதி மற்றும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் நிதி உதவிடன் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் நடைபெற்று வரும் பணிக்கு நிதியுதவி அளித்தமைக்கு நன்றி தெரிவித்திருத்தார். குறிப்பாக புதுச்சேரியில் போக்குவரத்து நெரிச்சலை குறைக்க செயல்படுத்தப்பட உள்ள இந்திர காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரை கட்டப்பட உள்ள மேம்பாலத்திற்கு ரூ.436.18 கோடி வழங்கியமைக்கு நன்றி தெரிவித்திருத்தார்.

13.30 கிலோமீட்டர் நீளம் கொண்ட கடலூர் எல்லை முள்ளோடை வரையான புதுச்சேரி-கடலூர் சாலையினை 4 வழி சாலையாக மாற்றிடவும் அதில் 2.6 கிலோமீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமைத்திடவும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ரூ.650 கோடி வழங்கியது. மேற்சொன்ன சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைத்திடவும் வார இறுதி நாட்களில் புதுச்சேரிக்கு வருகை வரும் சுற்றுலா பயணியர்களால் ஏற்படும் கூடுதல் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்திடவும் மேம்பாலத்தின் நீளத்தை 2.6 கீலோமீட்டரில் இருந்து 13.30 கிலோமீட்டராக நீடித்து செயல்படுத்திட அதற்குண்டான செலவினம் ரூ.1500 கோடியினை நிதியுதவியாக அளித்திட முதல்வர் அக்கடித்தில் கோரிக்கை விடுத்தார்.

ஏனாம் பிராந்தியத்தில் மீன்வளத்துறை அலுவலகத்தில் இருந்து தேசிய நெடுங்சாலையை இணைக்கும் தற்பொழுதைய சாலையை மேம்படுத்த அமைச்சகத்திடமிருந்து ரூ.8.89 கோடியினை கோரியுள்ளார். நிதியுதவி பெற்று நடைபெற்று வரும் பணிகள் தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பணிகள் காலகெடுவிற்குள் முடிக்கப்படும் என்றும் கடிதத்தில் உறுதி அளித்துள்ளார்.

மத்திய அமைச்சர் முதல்வரின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்ததாகவும் அமைச்சக அதிகாரிகளுக்கு இக்கோரிக்கை குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு இட்டதாகவும் அது தொடர்பாக நாளை (6.10.2026) விரிவாக விவாதிப்பற்கு நேரம் ஒதுக்கி இருப்பதாகவும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்தார்.

டில்லியில் நடைபெற உள்ள GST கூட்டத்தில் முதல்வர் சார்பாக கலந்து கொள்ள குஜராத்திலிருந்து டில்லி சென்றுள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ நாளை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி சந்தித்து மேற்சொன்ன சாலை மேம்பாட்டு திட்டங்கள் குறித்து பேச உள்ளார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top