Times of Puducherry
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறை சாலையில் காய்கறி கழிவுகள் மூலம் இயற்கை எரு தயாரிப்பு முறையை தொடங்கி வைத்தார் துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன்.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் “தூய்மையே சேவை” விழிப்புணர்வு நிகழ்ச்சி காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் நடைபெற்றது.துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு தூய்மை திட்ட செயல்பாடுகளை தொடங்கி வைத்தார். அதன்படி, காய்கறி கழிவுகள் மூலம் இயற்கை எரு தயாரிப்பு முறையை தொடங்கி வைத்தார். தாயின் பெயரில் ஒரு மரம் திட்டத்தின் கீழ் மரக்கன்று நட்டு வைத்தார்.
சிறை கைதிகளின் புனர்வாழ்வு செயல்பாடுகளின் கீழ் நடைபெறும் தோட்டப்பயிர் உற்பத்தி, மரம் வளர்ப்பு, கைவினை பயிற்சி ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். உற்பத்தி பொருட்களை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து காணொளி கலந்துரையாடல் அறை (Video Conference Hall), மற்றும் சிறை கைதிகளுக்கான கம்ப்யூட்டர் பயிற்சி திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.
முன்னதாக, துணைநிலை ஆளுநருக்கு காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. உடன், தலைமைச் செயலரின் சிறப்பு அதிகாரி ராஜீவ் சுக்லா, உள்ளாட்சித் துறை இயக்குனர் ஆதர்ஷ், சிறைத்துறை ஐஜி மோகன் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.