Times of Puducherry

பண்ருட்டி கோர்ட்டில் எம்.எல்.ஏ. மோகன் ஆஜர்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
5 Oct 2026 • 6:24 PM
mla-mohan-appeared-court

கடந்த 2023-ம் ஆண்டு பண்ருட்டியில் அதிமுக சார்பில் போதை எதிர்ப்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அதிமுக நகர செயலாளரும், பண்ருட்டி எம்.எல்.ஏ.வுமான மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை பண்ருட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி கீதா முன்னிலையில் எம்.எல்.ஏ. மோகன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஆஜராகினர். வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top