Times of Puducherry

சமத்துவ சீமந்தம் வையாபுரி மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
5 Oct 2026 • 11:17 PM
baby shower-vaiyapuri manikandan-muthialpet

புதுச்சேரியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் நடைபெற்ற சமத்துவ சீமந்தம் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்து சீமந்தம் செய்து வைத்தார்.

புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெறும் சமத்துவ சீமந்தம் மற்றும் ஊட்டச்சத்து விழா,முத்தியால்பேட்டை முருகன் திருமண நியத்தில் நடைபெற்றது. தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற சமத்துவ சீமந்தம் நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு, பாரம்பரிய சடங்குகளுடன் சீமந்தம் செய்து வைத்தார்.

சமத்துவ சீமந்தம் வையாபுரி மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது

வெற்றிலை, பாக்கு பூ பழங்கள், தேங்காய் உள்ளிட்ட இனிப்பு வகைகள், கார வகைகள், மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினரும் வையாபுரி மணிகண்டன் கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்து மலர் தூவி வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் மேம்பாட்டு துறை அதிகாரிகள் ஊர் பொதுமக்கள் பெண்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top