Times of Puducherry

திருப்பரங்குன்றம் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் சுனை சுத்தம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
22 Oct 2026 • 7:50 PM
thiruparangkundram-natural-spring-cleaning-work-done

மதுரை மாவட்டம்: திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் உள்ள சுனையில் மீன்கள் இறந்ததைத் தொடர்ந்து, சுனை சுத்தம் செய்யப்பட்டு சீரான நிலையில் பராமரிக்கப்படுகிறது.

சுனையில் மீன்கள் இறந்ததற்கான காரணத்தைக் கண்டறிந்து, அங்கு மீண்டும் இதுபோன்ற நிகழ்வு ஏற்படாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், சுனையின் தூய்மையைப் பராமரிக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது சுனை முழுமையாகச் சுத்தம் செய்யப்பட்டு, சீரான நிலையில் பராமரிக்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top