Times of Puducherry
புதுச்சேரியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மகன் ஹரிஷ். இவர் “Finance with Harish” என்ற பெயரில் Youtube-ல் நிதி ஆலோசனைகளை வழங்கி வந்ததுடன், சுமார் 13 லட்சம் பின்தொடர்பவர்களைக் (Followers) கொண்டிருந்தார்.
இந்நிலையில், மற்றொரு Youtube பிரபலமான ஜேசன் சாமுவேல் விஜயகுமார் என்பவர், ஹரிஷை மிரட்டி பணம் பறிக்க முயன்றதுடன், அவரைப் பற்றி அவதூறான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகவும், இதனால் ஹரிஷின் சமூக வலைதளக் கணக்கு முடக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில், ஹரிஷ் 20.10.2026 அன்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இது தொடர்பாக, ஹரிஷின் தந்தை அளித்த புகாரின் பேரில், கானத்தூர் காவல் நிலையத்தில் Cr.No.167/2026, BNS பிரிவு 108-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கின் விசாரணையில், மற்றொரு Youtube பிரபலமான ஜேசன் சாமுவேல் என்பவர்தான் ஹரிஷின் தற்கொலைக்கு காரணம் என்பது சாட்சிகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஜேசன் சாமுவேல் விஜயகுமார் சம்மந்தப்பட்ட நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட உள்ளார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.