Times of Puducherry
கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மங்களநாயகி அம்மன் கோவில் குளம் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மங்கலம்பேட்டை காவல் ஆய்வாளர் திரு. பழனிச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று சோதனை செய்தனர்.
அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக இருந்த 3 நபர்களை பிடித்து சோதனை செய்ததில், அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த விஜயகுமார் (22), த/பெ ஜெயபால், தெற்கு தெரு, காட்டுப்பரூர், விருத்தாச்சலம். கௌதம் (19), த/பெ கொங்கராயன், புதுத்தெரு, பில்லூர், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி குணா (18), த/பெ பழனிவேல், புது காலனி, M.அகரம், விருத்தாச்சலம் ஆகிய 3 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் 45 கிராம் அளவுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து எதிரிகள் 3 பேரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.