Times of Puducherry
புதுச்சேரி மாநிலம், நெட்டப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மடுகரை கிழக்கு கிராமப் பஞ்சாயத்தில், விக்சித் பாரத் ரோஜ்கார் மற்றும் ஜீவிகா மிஷன் (கிராமின்) (VB-G RAM G) உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.37 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள தூர்வாரும் பணியினை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பெ. ராஜவேலு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சித் துறை அதிகாரி சௌந்தரி, உதவிப் பொறியாளர் . E. ராமன், இளநிலைப் பொறியாளர் M. தன்ராஜ், பணியாய்வாளர் G. சந்திரமோகன் மற்றும் கிராமத் திட்ட ஊழியர்கள்கந்தவேல், முத்தமிழ்வாணன், சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.