Times of Puducherry

கடலூர் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது - தங்க நகைகள், கார்கள், இருசக்கர வாகனம் மற்றும் ரொக்க பணம் பறிமுதல்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
22 Oct 2026 • 4:39 PM
2-arrested-series-of-theft-incidents-cuddalore

கடந்த ஆகஸ்ட் மாதம் விருத்தாசலம் அருணாச்சலம் நகரில் முகுந்தன் என்பவரது வீட்டின் கதவை உடைத்து பிரேவில் இருந்த 18 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த மாருதி கார் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர் இது தொடர்பாக விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு மர்ம நபர்களை தேடிவந்தனர்.

இந்நிலையில் 30.09.2026ந் தேதி வடலூர் ஓம்சக்தி நகரில் வினோதினி என்பவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவிலிருந்த சுமார் 38சவரன் தங்க நகைகளை மன்மனவர்கள் திருடிச் சென்றனர்.

இது தொடர்பாக வடலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் இவ்விரு திருட்டு சம்பவங்களிலும் ஈடுப்பட்டது ஒரே குற்றவாளிகள் என விசாரணையில் தெரியவந்தது.

அதன் அடிப்படையில் விருத்தாச்சலம் உட்கோட்ட தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் 21.10.2026 நேற்று இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளான மாணிக்கராஜ் (41) த/பெ சந்திரன், ஜம்புலிங்கம் மெயின் ரோடு, GKM காலனி, கொளத்தூர், சென்னை, பரணிதரன் (30) த/பெ மோகனசுந்தரம், குப்புசாமி தெரு, அரும்பாவூர், வேப்பந்தட்டை வட்டம், பெரம்பலூர் ஆகியோர்களை கைது செய்து அவர்களை விசாரணை செய்ததில் அவர்கள் இரண்டு திருட்டு வழக்குகளிலும் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் அவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின்பேரில் இவ்விரு வழக்குகளிலும் திருடுப்போன வழக்கு சொத்துக்களான 38 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 1,04,000 /- ரொக்க பணம், மூன்று கார்கள், ஒரு இருசக்கர
வாகனம், 3 செல்போன்கள் பறிமுதல் செய்து எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top