Times of Puducherry

திருக்கோவலூரில் பிறந்த மாமன்னர் இராஜராஜ சோழரின் திருவுருவச்சிலையும் மணிமண்டபமும் அமைக்க அரசுக்கு தமிழ்ச் சங்கம் கோரிக்கை

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
22 Oct 2026 • 5:02 PM
koval-tamil-sangam-demading-to-built-rajarajan-manimandapam

கோவல் தமிழ்ச் சங்கம் சார்பில் இராஜராஜ சோழனின் 1041 ஆம் ஆண்டு சதயவிழா வீரட்டானேசுவரர் கோவிலில் நடைபெற்றது.

மலையமான் நாட்டின் தலைநகராக விளங்கிய திருக்கோவலூரில் பிறந்த வானவன் மாதேவிக்கும் சுந்தர சோழருக்கும் இவ்வூரில் பிறந்தவர்தான் அருண்மொழி என்பவர். பின்னாளில் மாமன்னர் இராசராச சோழன் ஆனார் என்பது வரலாற்றுப் பதிவு ஆகும்.
திருக்கோவலூரில், தமிழ்ச் சங்கம் சார்பில் கடந்த 17 ஆண்டுகளாக சதய விழாவை கொண்டாடி வருகிறது.

திருக்கோவலூரில் பிறந்த மாமன்னர் இராஜராஜ சோழரின் திருவுருவச்சிலையும் மணிமண்டபமும் அமைக்க அரசுக்கு தமிழ்ச் சங்கம் கோரிக்கை

இந்த ஆண்டு நடைபெற்ற சதய விழாவிற்கு தமிழ்ச் சங்கத் தலைவர் பாவலர், சிங்கார உதியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை உதவி இயக்குநர் பொ.கோ. லோகநாதன், கோவில் செயல் அலுவலர் ராஜாத்தி , ரோட்டரி சங்க மேனாள் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்ச்சங்கச் செயலாளர் பாரதிமணாளன் வரவேற்றார்.

திருக்கோவலூரில் பிறந்த மாமன்னர் இராஜராஜ சோழரின் திருவுருவச்சிலையும் மணிமண்டபமும் அமைக்க அரசுக்கு தமிழ்ச் சங்கம் கோரிக்கை

தமிழ்ச்சங்கத் துணைத்தலைவர் பா.கார்த்திகேயன் தொடக்கவுரையாற்றினார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் சு.பழனிச்சாமி:

மாமன்னர் இராசராச சோழரின் புகழினைப்பரப்பி வரும் ஏழு தமிழறிஞர்களுக்கு மாமன்னர் இராசராசன் விருதினையும் கட்டுரை, பேச்சு மற்றும் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற 141 மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டுப் பட்டயம், பரிசுப் பொருட்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

கி.பி. 947 இல் ஐப்பசி சதயத்தில் பிறந்த இராஜராஜ சோழருக்கு, திருக்கோவலூரில் அரசு சார்பில் சதய விழா நடத்த ஆவண செய்யவும்,
மணிமண்டபம் அமைக்கவும் தமிழ்ச் சங்கம் சார்பில் கோரிக்கை விடப்பட்டது. அக்கோரிக்கையினை அரசிடம் வலியுறுத்தி மணிமண்டபமும், திருவுருவச்சிலையும் அமைத்து அரசு சார்பில் சதயவிழா கொண்டாட அனுமதி பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.

திருக்கோவலூர் பண்பாட்டுக் கழக தலைவர் தே.முருகன் நாட்டிய நாடகத்தில் பங்கு பெற்ற கலைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசினார்.

முன்னதாக திருமுறை இசையரங்கத்தில் புலவர்கள் தேவ ஆசைத்தம்பி, தங்க விசுவநாதன், சென்னை பால் வண்ண சுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர். அடுத்து நடைபெற்ற புகழரங்கத்தில், புலவர் கா.பி. சுப்பிரமணியன் தலைமையில், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டத் தலைவர் மு.கலியபெருமாள், கம்பன் கழகச் செயலாளர் வைத்தி முருகன், தமிழ்நாடு அரசு தூய தமிழ்ப் பற்றாளர் விருது பெற்ற இளம் அழகர், அருணகிரி சிதம்பரநாதன், கவிஞர் அன்புநிலவன், தொடக்கக் கல்வி அலுவலர் தமிழ்ச் செல்வன்,

விழாவில் புலவர்கள், தமிழ்ச் சங்க நிர்வாகிகள், மாணவர்கள், பக்தர்கள் ஆகியோர் திரளாகப் பங்கேற்றனர். தமிழ்ச் சங்கப் பொருளாளர் குருராசன் நன்றி கூறினார். விழாவை, கோவில் எழுத்தர் மிரேஷ் குமார் , கவிஞர் மித்ராதேவி, தமிழாசிரியர் கலா, நாட்டிய ஆசிரியர் லாவன்யா, புலவர் திருஞான சம்பந்தன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top