Times of Puducherry

தமிழகத்தில் உள்ளாட்சியின் பல்லை பிடுங்கி அதிகாரமின்றி உட்கார வைத்துள்ளனர் - அண்ணாமலை

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
19 Oct 2026 • 7:22 PM
the-local-govt-dept-unfunctional-in-tn-condemns-annamalai

சண்முகநதி தூய்மைப் பணி திண்டுக்கல் மாவட்டம், பழனி உடுமலை சாலையில் உள்ள சண்முகநதியில் பக்தர்கள் நீராடும்
பகுதியை ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பினர் கடந்த சில நாட்களாக தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

பணி நிறைவடைந்ததை தொடர்ந்து, ஆற்றை பொதுமக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அண்ணாமலை கலந்து கொண்
டார். அமைப்பின் மாவட்ட நிர்வாகி கனகராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக நீர்நிலை ஆர்வலர்நிமல்ராகவன், அமைப்பின் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது:

‘வீ த லீடர்ஸ்’அமைப்பு சார்பில் பழனி சண்முகநதியில் 600டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. பக்தர்கள் ஆற்றில்துணிகளை வீசுவதை தவிர்த்து, நீர்நிலையை தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைக்க வேண்டும். தமிழகத்தில் பல ஆறுகள் சாக்கடைகளாகமாறி வருகின்றன. எனவே தான் வைகை, தாமிரபரணி, அமராவதி என பல ஆறுகளில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகிறோம் சண்முகநதியில் கோவில் கழிவுகளும் கலந்துள்ளன அறநிலையத்துறை உண்டியல் அரசுக்கு கொடுப்பதைதான் பணத்தை மட்டும் வாங்கி செய்கிறது. பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை முறையாக செய்ய வேண்டும்.

சண்முகநதியை மேலும் தூய்மைப்படுத்த அரசு நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய பணியே மக்கள் தினமும் பாதிக்கக்கூடிய விஷயங்களை சரிசெய்வதுதான். நம் நாட்டில் பஞ்சாயத்து முறை சரியாக இருக்கிறது என்றால் அது கேரளம் தான். ஆனால் தமிழகத்தில் உள்ளாட்சியின் பல்லை பிடுங்கி அதிகாரமின்றி உட்கார வைத்திருக்கிறோம் எனவே தான் தமிழகத்தில்
உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் போட்டியிட தயாராக இருக்கிறோம். மேலும் விரைவில் கட்சி தொடங்கவும் இருக்கிறோம் என
பேசினார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top