Times of Puducherry
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோகித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி ருப்பதாவது:
சீனா, வியட்நாம் மற்றும் இந்தியாவை இணைக்கும் வகையில் ரீஜினல் கண்டெய்னர்லைன் நிறுவனத்தின் மூலம் நேரடியாக சீனா, வியட்நாம்வழியாக தூத்துக்குடிக்கு சரக்கு கப்பல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, நேற்று முதல் முறையாக எம்.வி.நவதா பூம் என்ற சரக்கு பெட்டக கப்பல் தூத்துக்குடிக்கு வந்தது. அந்த கப்பலை வ.உ.சி.துறை நேமுக அதிகாரிகள், சரக்கு பெட்டக முனைய அதிகாரிகள் வரவேற்றனர். 147.82 மீட்டர் நீளமும், 23.38 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பல், 1100 சரக்கு பெட்டகங்களை கையாளும் திறன் கொண்டது.
இந்த கப்பல் சீனாவின் கின்ஷோ துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு, வியட்நாமின் ஹைபோங் துறைமுகம் வழியாக தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகம் வந்தடைந்தது. பின்னர் காட்டுப்பள்ளிதுறைமுகம், வியட்நாமின் சூலாய் துறைமுகத்தை சென்றடைகிறது. அங்கிருந்து கின்ஷோவுக்கு திரும்புகிறது. சீனாவின் கின் ஷோவில் இருந்து தூத்துக்குவந்தடைய 13 நாட்களும், வியட்நாமின் ஹைபோங்கில்இருந்து தூத்துக்குடியை வந்தடைய 12 நாட்களும் ஆகிறது என கூறினார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.