Times of Puducherry

H2 Cab Service App-ஐ முதலமைச்சர் ரங்கசாமி அறிமுகம் செய்தார்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
19 Oct 2026 • 6:57 PM
cm-introduced-cab-services-app

புதுச்சேரியில் H2 Cab Service App-ஐ அறிமுகம் செய்தார் முதலமைச்சர் ரங்கசாமி – ஓட்டுநர்களுக்கு விபத்துக் காப்பீட்டு ஆவணங்கள் வழங்கல்.

உதவும் கரங்கள் ஓட்டுநர் சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா, H2 Cab Service App அறிமுக விழா மற்றும் ஓட்டுநர்களுக்கு விபத்துக் காப்பீட்டு ஆவணங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரி முருகா தியேட்டர் அருகே, ECR சாலையில் உள்ள மார்க்கெட் கமிட்டி திடலில் நடைபெற்றது.

H2 Cab Service App-ஐ முதலமைச்சர் ரங்கசாமி அறிமுகம் செய்தார்


இந்நிகழ்ச்சியில் தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்தன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ந. ரங்கசாமியைச் சந்தித்தபோது, H2 Cab Service App-ஐ முதலமைச்சர் அறிமுகப்படுத்தித் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மெர்ட் என்.ஜி.ஓ. தலைவர் மற்றும் மானாடெக் குழும நிறுவனங்களின் தலைவர் ஆர். மனநாதன், ஜெனோ மாரன் பில்டர்ஸ் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆர்.டி.என். எஸ். தங்கமணி மாறன், அலர்ட் பாண்டி ஆலோசனைக் குழு உறுப்பினரும் ஜோதி கண் மருத்துவமனையின் நிறுவனரும் மருத்துவ இயக்குநருமான டாக்டர் ஆர்.டி.என். வனஜா வைத்தியநாதன், ஓய்வுபெற்ற அரசு அதிகாரி கே. ஐய்யனார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவின் ஒரு பகுதியாக, ஓட்டுநர்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு விபத்துக் காப்பீட்டு ஆவணங்கள் வழங்கப்பட்டன. ஓட்டுநர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் உதவும் கரங்கள் ஓட்டுநர் சங்க நிர்வாகிகள், ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top