Times of Puducherry
புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெற்ற சரஸ்வதி பூஜையில் முதலமைச்சர் ரங்கசாமி, தற்காலிக சபாநாயகர் அன்பழகன் கலந்துகொண்டு பூஜை செய்து கொண்டாடினர்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் சரஸ்வதி பூஜை விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. தற்காலிக சபாநாயகர் அன்பழகன் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பு பூஜை செய்து சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காண்பித்தார்.
அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாத பொருட்களை வழங்கினார். இதில் அமைச்சர்கள் ராஜவேலு, சிவக்கொழுந்து, ராஜசேகர், சட்டமன்ற உறுப்பினர்கள் சாய் ஜெய் சரவணன், செந்தில்குமார், மோகன்தாஸ்,அழகானந்தம், அசோக்ஆனந்த் சட்டப்பேரவை செயலாளர் தயாளன் உட்பட அரசு துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.