Times of Puducherry
சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு புதுச்சேரியில் பூஜை பொருட்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது,அதே சமயத்தில் பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
மகிஷாசுரனை வதம் செய்ததன் பின்னணியில் உழைப்பிற்கும் கருவிகளுக்கும் நன்றி செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரியின் ஒன்பதாம் நாளில் தொழில் மற்றும் வாழ்வாதாரத்திற்கு உதவும் கருவிகள் வாகனங்கள் மற்றும் புத்தகங்களை மக்கள் வழிபட்டு அவற்றின் முக்கியத்துவத்தை போற்றுகின்ற நாளை சரஸ்வதி பூஜையாகவும் ஆயுத பூஜையாகும் கொண்டாடி வருவது வழக்கம்.
அந்த வகையில் மக்கள் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு ஆயுத பூஜைக்கு தயாராகினர். இலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு புதுச்சேரி பெரிய மார்க்கெட் குபேர் அங்காடி பகுதியில் பூஜைக்கு தேவையான அவல் பொரிகடலை, வாழைப்பழம் ஆப்பில் உள்ளிட்ட பழ வகைகள் என விற்பனைக்கு குவிந்துள்ளன. மேலும் பூசணிக்காய் வாழைமரம் தோரணங்கள் வாழை கன்றுகள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களும் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. ஆயுத பூஜை இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் பலர் பெரிய மார்க்கெட்டில் குவிந்து தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கி வருகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை வரும் சிறப்பு பூஜை என்பதால் பொருள்களின் விலை அதிகரித்து காணப்பட்டாலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஒருசேர வாங்கி சென்றனர். ஆயுத பூஜை முன்னிட்டு பெரிய நிறுவனங்கள் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களிலும் பூஜை நடைபெறுவதால் அவர்களுக்கு தேவையான பொருள்களையும் வாங்குவதற்காக கூடியதால் புதுச்சேரி பெரிய மார்க்கெட் குபேரங்காடியில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. சராசரியாக ஒரு கிலோ விற்கு 600 ரூபாய் விற்பனையான மல்லிகை பூ தற்போது 1600 ரூபாய்க்கும் சாமந்திப்பூ கிலோ 320 ரூபாய்க்கும், செவ்வரளி 200 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது, விழாக்காலம் என்பதால் பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டாலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். மேலும் பூக்களின் விலை உயர்வு காரணமாக பூ மாலைகளின் விளையும் அதிகரித்து விற்கப்பட்டது. சராசரியாக 100 ரூபாய்க்கு விற்ற மாலை தற்போது 200 ரூபாய் என்ற அளவில் இரு மடங்காக விலை அதிகரிக்கப்பட்டு விற்பனையாகி வருகிறது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.