Times of Puducherry

திருவண்ணாமலை வெட்டவெளி சித்தர் எழுதிய நூல் வெளியீட்டு விழா

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
19 Oct 2026 • 7:58 PM
book-release-ceremony-of-vettaveli-sittar's-craft

புதுச்சேரியில் அருணகிரிநாதர் மற்றும் மாணிக்கவாசகருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று திருவண்ணாமலை வெட்டவெளி சித்தர் முதலமைச்சர் ரங்கசாமிக்கு கோரிக்கை விடுத்தார்.

திருவண்ணாமலை வெட்டவெளி சித்தர் எழுதிய பேர் இல்லாதவன் பேரூரை பாகம் ஒன்று மற்றும் இரண்டு மற்றும் நீல நிற தொடர் என்ற மூன்று சித்தர் நூல் வெளியீட்டு விழா புதுச்சேரியில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதல்வர் ரங்கசாமி நூல்களை வெளியிட ஓய்வு பெற்ற நீதிபதி முருக பூபதி நூல்களை பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய திருவண்ணாமலை வெட்டவெளி சித்தர்:

தனிமை பயணம் தொலைதூரப் பயணம் நிதான பயணம் இருந்தால் சித்தர் உன்னை தேடி வரார் என்றும்,நிதானம் தவறாமல் இருந்தால் ஞானி உன்னை தேடுவான் நிதானத்துடன் ஒருவன் இருந்தால் அவன் ஜெயிப்பான் என்றும் கூறினார். ஒரு சூழ்நிலையை ஏற்றுக்கொண்டு பயணித்தால் உயர்வாக பார்க்கப்படுவாய் என்று என்று பேசிய வெட்டவெளி சித்தர் புதுச்சேரியில் அருணகிரிநாதர் மற்றும் மாணிக்கவாசகருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி:

ஆன்மீக சிந்தனையை தூண்டக் கூடிய வகையில் நமது செயல்பாடு இருக்க வேண்டும், மனிதனாக பிறந்த அனைவருக்கும் அன்பு இறக்கம் வேண்டும் என்றும் சித்தர்கள் வழியில் நின்றால் எதையும் நம்மால் சாதிக்க முடியும் நம்பிக்கையோடு வாழ்ந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று கூறினார். நிகழ்ச்சியில் திருவண்ணாமலை வெட்டவெளி சித்தரின் சீடர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top