Times of Puducherry
புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடிஜி தலைமை ஆட்டோ ஸ்டாண்டில் இன்று(19/10/26) ஆயுத பூஜை நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது .
மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. ஆ.நமச்சிவாயம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆட்டோ ஸ்டாண்டின் புதிய பெயர் பலகையை திறந்து வைத்து, சங்கத்தில் உள்ள 40 உறுப்பினர்களுக்கும் தலா ஒரு கிரைண்டர், 10 கிலோ அரிசி மற்றும் சீருடை வழங்கினார்.
நரேந்திர மோடி ஆட்டோ ஸ்டாண்ட் ஆயுத பூஜை விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெயர் பலகை திறந்து வைத்ததுடன் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆட்டோவையும் சிறிது தூரம் ஓட்டி காட்டினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை நெல்லித்தோப்பு தொகுதி பொறுப்பாளர் மற்றும் மதர் குளோரி நீட் அகாடமியின் இயக்குனர் அந்துவான் பிரபு, பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஓபிசி அணி பொறுப்பாளர் திரு. சு.சாம்ராஜ், உருளையன்பேட்டை தொகுதி தலைவர் சக்திவேல் மற்றும் ராபர்ட் கிளைவ் , ஆட்டோ சங்கத் தலைவர் மாதவன் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் மண்ணாடிப்பட்டு தொகுதி பொறுப்பாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் , மோரிஸ், பாரதி, அசோக், அப்பு, பாலா மற்றும் தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.