Times of Puducherry

த.வெ.க. அரசு மீதான குற்றச்சாட்டுகலை திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ள நினைக்கும் எண்ணம் நிச்சயம் ஈடேறாது - ஸ்டாலின்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
26 Oct 2026 • 8:11 PM
stalin-condemns-tvk-govt-for-anbil-arrest

அரசியல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களைக் கைது செய்துள்ள த.வெ.க. அரசுக்குக் கடும் கண்டனம்! இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் தெரிவித்ததாவது:

தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த அன்பில் மகேஸ் அவர்களைக் கைது செய்திருப்பதன் மூலம், சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடலாம் என்று ஆளும் அரசு நினைக்கிறது.

த.வெ.க. அரசு மீதான குற்றச்சாட்டுகலை திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ள நினைக்கும் எண்ணம் நிச்சயம் ஈடேறாது - ஸ்டாலின்

அன்பில் மகேஸ் அவர்கள் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார். அதேசமயம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் த.வெ.க. அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top